குளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சங்கராபுரம் அருகே குளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை தனிநபர் ஆக்கிரமித்து விவசாய பயிர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமலும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.