வீரபாண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

வீரபாண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு போனது.

Update: 2022-03-12 16:11 GMT
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி வீட்டில் விசேஷம் வைத்ததாகவும், அதன் மூலம் ரூ.1 லட்சம் மொய் பணம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை அவர் வீட்டிலிருந்த பீரோவில் வைத்து இருந்தார்.  
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர்  மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்