கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீஸ் விசாரணை
கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீஸ் விசாரணை
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராசன் மகள் பத்மகலா(வயது 22). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலையில் வெகுரேமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பத்மகலாவை காணவில்லை.
பின்னர் இது குறித்து மாணவியின் தாய் அன்னபூரணி கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.