மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சாததான்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-03-12 15:41 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் முத்துக்குட்டி என்ற முத்துக்குமார் (வயது 40). தொழிலாளியான இவருக்கு மனைவி பார்வதி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மின்வாரிய அலுவலர்களுடன் தற்காலிக பணியாளராக சென்று வந்தார். கடந்த மாதம் சாத்தான்குளம் அருகே  பொத்தகாலன்விளையில் மின் கம்பத்தில் பழுது செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்