கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேராக பயங்கரமாக மோதியது
கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேராக பயங்கரமாக மோதியது
கோவை
கோவை மணிகாரம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். இவர் நேற்று காலை வீட்டுக்கு செல்வதற்காக கணபதியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை முந்தியபடி அதிவேகமாக ஒரு கார் வந்தது. அந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் ராமசுப்பிரமணியம் ஓட்டி வந்த மோட் டார் சைக்கிள் மீது நேருக்குநேராக பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராமசுப்ரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமரா வில் பதிவானது.
நெஞ்சை பதற வைக்கும் அந்த விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.