அங்கன்வாடி மையத்தில் சுகாதார துறையினர் ஆய்வு
சாத்தான்குளம் அருகே கருங்கடலில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதார துறையினர் திடீரென ஆய்வு செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆனந்தன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், காய்ச்சிய சூடான தண்ணீர் வழங்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர். அப்போது குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டு கொசு புழு உருவாகாதவாறு பராமரிக்க வலியுறுத்தினர். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உப்பில் அயோடின் அளவு சரியாக இருக்கிறதா? எனவும் சரிபார்க்கப்பட்டது.