கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
திருவெண்காடு அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நெப்பத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் அகோரமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், துணை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர் கவிதா வரவேற்றார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் கலந்து கொண்டு சிறந்த கன்றுகளை பராமரித்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் பசும் தீவன விதைகளை வழங்கி பேசினார்.
முகாமில் துணை இயக்குனர்கள் முத்துக்குமாரசாமி, அப்துல் இப்ராஹிம், விஜயகுமார், செல்லத்துரை உள்ளிட்ட கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டன.