சோளிங்கர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை

சோளிங்கர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-12 06:09 GMT
சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி சகிலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினையால் மாணிக்கம்  பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தா்ா. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்