மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
கடையநல்லூரில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்லும் வகையில், காலை, மாலையில் போதிய பஸ்களை இயக்க வேண்டும். கல்லூரியில் நூலகம், சுற்றுச்சுவர், கேண்டீன், குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். கல்லூரியில் கூடுதலாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் அரவிந்த், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலோமினா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.