கஞ்சா விற்றவர் கைது

பாளையங்கோட்டையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-12 00:19 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் மற்றும் போலீசார் பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (வயது 36) என்பதும், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்லத்துரையை கைது செய்து, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



மேலும் செய்திகள்