கிணற்றில் வாலிபர் பிணம்
சிவகிரி அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
சிவகிரிக்கு தெற்கே தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெற்றிலை மண்டபம் அருகே தனியார் கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.