மண்டியாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
மண்டியாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்
மண்டியா:
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் ெபற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக நேற்று சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூருவுக்கு வந்தனர். இந்த வழக்கில் சசிகலாவுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோர் காரில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு சென்றனர். அங்குள்ள பிரசித்தி பெற்ற நிமிஷாம்பா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் மைசூருவுக்கு சென்றார். சசிகலா, நேற்று மைசூருவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று (சனிக்கிழமை) காலை சசிகலா, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு ெசன்னைக்கு செல்கிறார்.