ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

Update: 2022-03-11 21:30 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2 பேருக்கு தொற்று பரவிய நிலையில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 655 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 885 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 36 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்