பேராவூரணி பகுதியில் கடும் பனிப்பொழிவு
பேராவூரணி பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
பேராவூரணி:
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதியடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை நிலவியது.