பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-11 20:43 GMT
சேலம்:-
சேலம் சீரங்கன்பாளையத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் கோபால் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்