தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு

தேசிய அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-03-11 20:42 GMT
ஏற்காடு:-
ஏற்காடு குண்டூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சவுந்தர்யா (வயது 17). இவருக்கு கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை. அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தமிழக விழி இழந்தோர் சங்கத்தினர் நடத்தும் தங்கும் விடுதியில் தங்கி உடையாப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் சவுந்தர்யா 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஜூடோ விளையாட்டில் ஆர்வம் இருந்ததை தெடர்ந்து ஜூடோ பயிற்சியாளர் மகேஸ்வரன் பயிற்சி அளித்து வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அகில இந்திய அளவிலான கண் தெரியாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஜூடோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வாய் பேச முடியாதோர் பிரிவில் சவுந்தர்யா கலந்து கொண்டு  தங்கப்பதக்கத்தை வென்றார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.  இதே போல் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கமும், 2020-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கமும் அவர் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்