மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-03-11 20:39 GMT
விராலிமலை
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட அத்திப்பள்ளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அத்திப்பள்ளம் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சிவாவேலு (வயது 49) என்பவர் மது விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்