வராகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

மண்டல பூஜை நிறைவுவிழாவையொட்டி வராகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-03-11 19:59 GMT
கரூர், 
கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுயம்பு சக்தி விநாயகர், வராகி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுயம்பு சக்தி விநாயகர் மற்றும் வராகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்