புதூர்,
மதுரை டி.ஆர்.ஓ. காலனி பெரியார் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.