மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது

Update: 2022-03-11 19:32 GMT
மானாமதுரை,

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துச்சாமி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினி தேவி, பர்னபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாளர் தவமணி தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.80 லட்சத்திற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டது, 2022-2023-ம் ஆண்டிற்கு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.83 லட்சத்திற்கு பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, சோமசுந்தரம், மலைச்சாமி, முருகேசன், பஞ்சவர்ணம், ஜெயலட்சுமி, ராதா, சுந்தரவல்லி, பாண்டியம்மாள், மற்றும் அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்