மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 23 ஆண்டு சிறை
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்காரம்
விருதுநகர் பாண்டியன் நகரை அடுத்துள்ள அல்லம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 22). கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 5-9-2016 அன்று அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.
23 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், பாண்டியராஜனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீர்்ப்பில் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.