திருச்சி மாரியம்மன் கோவில் வீதி அரபிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (74). சம்பவத்தன்று திருச்சி பெரியகடை வீதியில் உள்ள ஒரு வங்கி முன் தனது மொபட்டை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, அவருடைய மொபட்டை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.