பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக சிவகங்கை நகராட்சி சார்பில் புகார் பெட்டி
பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக சிவகங்கை நகராட்சி சார்பில் புகார் பெட்டி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டில் நகராட்சியின் சார்பில் புகார் பெட்டி வைக்கும் நிகழ்ச்சி நகரசபை தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிவகங்கை நகர் 27-வது வார்டில் புகார் பெட்டியை திறந்து வைத்து நகரசபை தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது:-
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வார்டில் உள்ள குறைகள் குறித்து தெரிவிக்க நகராட்சிக்கு அலைய வேண்டி அவசியம் கிடையாது. இங்குள்ள புகார் பெட்டியில் தங்கள் குறைகள் குறித்த மனுவை பேப்பரில் எழுதி போட்டால் போதும.் 24 மணி நேரத்திற்குள் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை குறித்து விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.மேலும் இதுபோன்ற புகார் பெட்டியைத் அனைத்து வார்டுகளிலும் வைக்கப்படும். இது தவிர சிவகங்கை நகர் மக்களுக்கு நகராட்சியில் உள்ள புகார்கள் தெரிவிப்பதற்காக வசதியாக வாட்ஸ்அப் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். விழாவில் நகர்மன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜஅமுதன், மற்றும் ஹரிஹரன், முத்து முனியாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.