புகார் பெட்டி

புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு

Update: 2022-03-11 18:36 GMT
குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்வாழ்மங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதியான குடி தண்ணீர் தினமும் கிடைப்பது இல்லை. இதைத் தொடர்ந்துகுடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள், வாழ்மங்கலம்.

புயல் பாதுகாப்பு கட்டிடம் வேண்டும்
நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் புயல் பாதுகாப்பு கட்டிடம் இருந்தது. அது சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் புயல் பாதுகாப்பு கட்டிடம் இன்னும் கட்டி தரப்படவில்லை. இந்த பகுதியில் அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புகுள்ளாவார்கள். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் புயல் பாதுகாப்பு கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடக்கு பொய்கை நல்லூர்.

மேலும் செய்திகள்