காரைக்குடி
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வேலை வாய்ப்பு முகாமை அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடத்தியது.. முகாமிற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார சிவகங்கை மாவட்ட இயக்குனர் வானதி தலைமை தாங்கினார். அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வேலைவாய்ப்பு முகமை ஒருங்கிணைப்பாளர் போதகுரு வரவேற்றார். அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து முகாமில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பணி ஆணைகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.
இம்முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றனர்.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி ஆணைகளைப் பெற்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவைப்படும் பட்டதாரிகளை தேர்ந்தெடுத்தனர்.