கல்லூரி மாணவி வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் அபேஸ்
கல்லூரி மாணவி வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் திருடுபோனது
சிவகங்கை
திருப்புவனத்தை அடுத்த கொந்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 19) இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஏ.டி.எம். கார்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவருடைய வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டுள்ள லிங்கில் ஏ.டி.எம். கார்டு விவரங்களை தெரிவிக்கும்படி ஒருவர் கூறினாராம். இதைதொடர்ந்து சவுமியா தன்னுடைய ஏ.டி.எம். கார்டு விவரங்களை குறிப்பிட்ட அந்த லிங்கில் தெரிவித்தாராம். இதன் பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்து விட்டார்களாம்.இதை தொடர்ந்து சவுமியா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.