பள்ளத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பள்ளத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-03-11 18:13 GMT
திருச்சி, மார்ச்.12-
திருச்சி-திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் பிராட்டியூரை அடுத்த புங்கனூர் பிரிவு சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள சாலையில் நேற்று காலை ஒரு கண்டெய்னர் லாரி திருப்ப முயன்ற போது பள்ளத்தில் இறங்கி சிக்கியது. இதில் நடுரோட்டில் சாலையை அடைத்து கொண்டு நின்ற லாரியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அந்த வழியாக சென்ற காந்திமார்க்கெட் வியாபாரிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகே திருச்சி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து சீரானாது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்