இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கொம்படி மதுரை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 52). .இவர் சம்பவத்தன்று மாலை 6 மணி அளவில் தனது மிளகாய் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்தது.
இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது அவர் இறந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.