சமயபுரம், மார்ச்.12-
எஸ்.கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி வனஜா (வயது 45).இவர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை அங்கிருந்து எஸ். கண்ணனூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக வனஜாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் வனஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் இருங்களுரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.