வாய்மேடு
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் குட்டிதேவன் காடு பகுதியில் உள்ள சோழநம்பி என்பவரது வயலில் ஒரு மயில் காலில் அடிப்பட்டு கிடந்தது. இந்த மயிலை விவசாயி சோழநம்பி மீட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அய்யூப்கானுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோடியக்கரையில் இருந்து வந்த வன அலுவலர் பாண்டியனிடம் மயிலை ஒப்படைத்தார்.