அதனூர் ஏரியில் இருந்து வண்டல் மண் கடத்தல் டிரைவர்கள் 2 பேர் கைது பொக்லைன் எந்திரம் லாரி பறிமுதல்

அதனூர் ஏரியில் இருந்து வண்டல் மண் கடத்தல் டிரைவர்கள் 2 பேர் கைது பொக்லைன் எந்திரம் லாரி பறிமுதல்

Update: 2022-03-11 17:15 GMT
செஞ்சி

கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அதனூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதனூர் ஏரியில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் சிறுவாலை கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சவுந்தரராஜன்(வயது 22), பொக்லைன் எந்திர டிவைர் மானூர் கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் முனுசாமி(32) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்