பாலக்கோடு பகுதியில் 15ந்தேதி மின்சார நிறுத்தம்

பாலக்கோடு பகுதியில் 15ந்தேதி மின்சார நிறுத்தப்படுகிறது.

Update: 2022-03-11 16:58 GMT
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்தில் 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால்  பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்