பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்படடது.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். இதில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆசிரியைகள் மற்றும் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதில் பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்.வெள்ளையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பன்னீர்செல்வம், பாடி செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ஆசிரியர் ஜெயவேல் நன்றி கூறினார்.