காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலாஜி மற்றும் போலிசார் நேற்று சிறுகரும்பூர் ஏரிக்கால்வாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்தவர்களை போலிசார் மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மணல் மூட்டைகளுடன் இரண்டு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிறுகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 26) மற்றும் தனுஷ்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர்.