சோளிங்கர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
சோளிங்கர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவரின் மகன் பிரபாகரன். இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாயம் செய்து வந்தார். அவர், பல நாட்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. பிரபாகரனுக்கு மீண்டும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த பிரபாகரன் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த ஒரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.