ராயக்கோட்டை:
ராயக்கோட்டை போலீசார் கொப்பகரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பாலனாம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (வயது28), சீனிவாசன் (40), தமிழரசு (25), முனிராஜ் (34) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.