405 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 405 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-11 13:36 GMT
பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 405 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்து கேரளாவுக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனி பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு தனிப்பிரிவு போலீசார், நகர மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு நின்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அதில் சில மூட்டைகள் கிடந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

இதையடுத்து அந்த வாகன டிரைவரிடம், போலீசார் விசாரித்தனர். அதில் அவர் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ஜவகர் என்ற சபரிகிரி (வயது 38) என்பதும், கோவை செட்டிப்பாளையம் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. 

மேலும் அதை கேரளாவுக்கு கடத்துவதற்கு அங்கிருந்து வரும் மற்றொரு வாகனத்திற்காக காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜவகரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 405 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்