ஆம்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட

Update: 2022-03-11 13:36 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 23). பட்டதாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதனால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பாணக்கார குறுக்குத் தெருவில் வசித்து வரும் இவரது சித்தி சுஜாதா வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து அங்கிருந்து  ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் சுஜாதா வேலைக்கு சென்றிருந்த நிலையில் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் சங்கீதாவின் தாய் மஞ்சுளா அவரை பார்க்க வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் சங்கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்