மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக பலியானாா்

Update: 2022-03-11 11:23 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சாயல்குடி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரி மகன் சக்தி (வயது 33). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பொன்னையாபுரம் பகுதியில் ஆடு கிடை போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். பொன்னையாபுரம் ஊர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்