ஆதித்தனார் கல்லூரியில் நாட்டிய, நாடக ஒப்பனைக்கலை பயிலரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டிய, நாடக ஒப்பனைக்கலை பயிலரங்கம் நடைபெற்றது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டிய, நாடக ஒப்பனைக்கலை பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் நாட்டுப்புறக் கலை மன்றம், தமிழ் நாடக மன்றம், தமிழ் இசை மன்றம் ஆகியவை இணைந்து மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில் இப்பயிலரங்கை நடத்தின. மாணவர்கள் கல்லூரி அளவிலும், பல்கலைக்கழக அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் மேடை நாடகம், நாட்டிய கலை போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறும் வகையில் இப்பயிலரங்கில் ஆடை, ஆபரண ஒப்பனை பயிற்சி வழங்கப்பட்டது. மேடை நாடக ஒப்பனைக் கலைஞர் சாத்தூர் சக்திவேல் ஒப்பனை மூலம் மாணவர்களை பல்வேறு பாத்திரங்களாக உருவாக்கி பயிற்சி வழங்கினார்.
இப்பயிலரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நாட்டுப்புற கலை மன்ற இயக்குனர் ஆர்.எழிலி வரவேற்று பேசினார். தமிழ் நாடகம், தமிழ் இசை மன்ற இயக்குனர் கு.கதிரேசன் நன்றி கூறினார். முதுநிலை மாணவியர் அக்சாள் ஜோதி, கெனிட் அட்லின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியர் ராஜேஷ், ஆங்கிலத்துறை தலைவர் வே.சாந்தி, பர்வதவர்த்தினி, முனீஸ்வரி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.