பாளையங்கோட்டையில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

Update: 2022-03-10 22:08 GMT
நெல்லை:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தலைவர்கள் ஆழ்வார், அருணாசலம், சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நெடுஞ்சாலையில் பணியாற்றும் சாலைப்பணியாளர்களுக்கு அனைத்து அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அரசு நேரடி நிதியில் இருந்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள சாலைப்பணியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பணி காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்