விஷம் குடித்த வாலிபர் சாவு

விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்

Update: 2022-03-10 21:46 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பணிதாசன் (வயது 25). கூலி தொழிலாளியான, இவர் கடந்த 5-ந்தேதி இரவில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பணிதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்