மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-10 21:11 GMT
நெல்லை:
நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் முருகன்குறிச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்றதாக கீழ பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த அன்பு செல்வின் (வயது 31) என்பவரை கைது செய்தனர். இதேபோல் பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகர் பஸ் நிறுத்தம் அருகே மது விற்றதாக பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த மார்க் (48) என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்