பொதுமக்களிடம் பணம் திருடிய 8 பேர் கைது

பொதுமக்களிடம் பணம் திருடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-03-10 20:51 GMT
மணப்பாறை
மணப்பாறையை அடுத்த படுகளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு நபர்களிடம் பணம் திருடிய என்.குரும்பபட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார்(வயது 26), திருச்சி காந்தி நகரைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் (26), கொத்தமங்கலத்தை சேர்ந்த சரவணன் (32), ராம்ஜிநகரைச் சேர்ந்த சங்கர் (36), பெரியசாமி(35), திருப்பூர் மாவட்டம் மதுரையன் வலசு பகுதியைச் சேர்ந்த முனுசாமி (32), பொங்கலூரை சேர்ந்த ராஜன் (60), திருவெறும்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 8 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,470 மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்