குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர் கோரிக்கை

குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-10 20:18 GMT
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசு செயல்படுத்தி உள்ளதைப்போல் தமிழகத்திலும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஓய்வூதியர் மற்றும் துணைவருக்கான மருத்துவ செலவை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் தலைவர் வடமலை, செயலாளர் தம்பி, பொருளாளர் குடியரசு உள்ளிட்ட ஏராளமான ஓய்வு பெற்ற அலுவலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மருதபாண்டியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்