மணல் கடத்தியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-10 20:18 GMT
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜுக்கு நெரிஞ்சிகோரை ஓடையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று கண்காணித்தார். அப்போது சாவடிகாடு கூத்தாடி தெருவை சேர்ந்த பெரியசாமி(வயது 60), நெரிஞ்சிகோரை ஓடையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்