நாமக்கல்லில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
நாமக்கல்லில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
நாமக்கல்:
எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சங்க தலைவர் செல்வகுமார், பொருளாளர் ராமசந்திரன் மற்றும் எல்.ஐ.சி. ஊழியர்கள், முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.