காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே மித்ராவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மித்ராவயல்-சாக்கோட்டை சாலையில் நடந்தது. இதில் மொத்தம் 40 வண்டிகள் கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை கள்ளந்திரி ஐந்து கோவில் சுவாமி வண்டியும், 2-வது பரிசை பீர்க்கலைக்காடு பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை காயக்காடு குமார் மற்றும் பாகனேரி ராமநாதன் வண்டியும், 4-வது பரிசை சாக்கோட்டை கோதையம்மாள் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற நடுமாடு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வடகுடி நெல்லியாண்டவர் வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 3-வது பரிசை பீர்கலைக்காடு அப்துல்ராசாக்பைசல் வண்டியும், 4-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும் பெற்றது.
பரிசுகள்
இறுதியாக நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை சாக்கோட்டை கோதையம்மாள் வண்டியும், 3-வது பரிசை பூதங்குடி சுப்பிரமணி வண்டியும், 4-வது பரிசை பாகனேரி காடனேரி சுந்தர் வண்டியும் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடந்த 2-வது பிரிவில் முதல் பரிசை வாழ்ரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சண்முகம் வண்டியும், 2-வது பரிசை பீர்க்கலைக்காடு பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை கருவிடைசேரி சாத்தையா மற்றும் பெத்தாச்சிகுடியிறுப்பு ராக்காச்சி அம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.