காரைக்குடி,
கல்லல் அருகே உள்ள செம்பனூர் காட்டு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர். மேலும், அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.