மரக்காணம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

மரக்காணம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானாா்.

Update: 2022-03-10 17:55 GMT
மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எட்டியப்பன். இவரது மகன் விக்னேஷ் (வயது 25). லாரி டிரைவர். நேற்று காலை தன்னுடன் லாரி கிளீனராக வேலை செய்யும் கார்த்திகேயன் (24) என்பவருடன் வெண்ணாங்குபட்டியில் இருந்து மரக்காணத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே தாழங்காடு பகுதியில் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். 

தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த விக்னேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்